மாமியாருடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக சின்னதிரை நடிகை புகார்!

  0
  2
  Actress jayashree

  சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ  இளவரசி சீரியல் மூலம் அறிமுகமானார். வம்சம் தொடரில் கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர்  கொடுக்கும் வில்லியாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

  சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ  இளவரசி சீரியல் மூலம் அறிமுகமானார். வம்சம் தொடரில் கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர்  கொடுக்கும் வில்லியாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். வழக்கமாக சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் பல ஆண்டுகளாக ஒரே சீரியலில் ஒன்றாக நடிப்பதால் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். 

  ttn

  அதே போல ஜெயஸ்,ரீ சின்னத்திரையில் பெரும்பாலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணம் என்றாலும் கூட பெற்றோர்களின் சம்மதத்துடனே நடைபெற்றது. நடிகர் ஈஸ்வர் முதன்முதலாக விஜய் டிவி ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்துப் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். தற்போதும் கூட, சில தொடர்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

  daugher

  இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ எனது மாமியாருடன் சேர்ந்து தன் கணவன் தன்னை கொடுமைப் படுத்துவதாகச் சென்னை அடையார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஈஸ்வர் மீது 4 பிரிவில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.