மாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்! திருவாரூரில் சோகம்!

  13
  மாதிரி படம்

  தமிழகம் முழுவதும் மழைக்காலம் துவங்கி விட்டதை அடுத்து பல இடங்களில் மின்சாரப் பொருட்கள் பழுதடைந்தும், மழை நீர் தேங்கியும் உள்ளது. பொதுமக்கள் போதிய பாதுகாப்பில்லாமல் சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்களாகவே களத்தில் இறங்குகிறார்கள். நிறைய இடங்களில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுபற்றி போதுமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை.

  died

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வசித்து வருபவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதியினர். இவர்களது வீட்டில் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதை தானே சரிசெய்வதற்காக லிசாவின் மாமனார் அசோகன் களத்தில் இறங்கி, மோட்டாரைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மோட்டாரை சரி செய்துக் கொண்டிருக்கும் அசோகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மருமகள் லிசா, மாமனார் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
  கீழே விழுந்து கிடக்கும் மாமனாரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் லிசாவும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகளும் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.