மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய சொன்ன ஆசிரியர் கைது: காரணம் இதுதானாம்!?

  0
  2
  மாதிரிபடம்

  வீட்டுப் பாடம் எழுதாத மாணவியின் கன்னத்தில் 14 மாணவிகளைக் கொண்டு  168 முறை அடிக்க வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

  மத்திய பிரதேசம்:  வீட்டுப் பாடம் எழுதாத மாணவியின் கன்னத்தில் 14 மாணவிகளைக் கொண்டு  168 முறை அடிக்க வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

  மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாமல் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மனோஜ் வர்மா, 14 மாணவிகளைக் கொண்டு தினமும் இரு முறை மாணவியின்  கன்னத்தில் அறையுமாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த சம்பவம் வகுப்பறையில் அரங்கேறியுள்ளது.  அதன்படி மாணவி  சுமார் 168 முறை அடிவாங்கியுள்ளார். 

  india

  இதையடுத்து இது குறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை சிவபிரசாத், பள்ளி நிர்வாகத்திடமும். போலீசிலும் புகார் கொடுத்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மனோஜ் வர்மாவை இடைநீக்கம் செய்தது. 

  arrest

  அதேபோல் சிவபிரசாத்தின் புகாரின் அடிப்படையில் போலீசார் மனோஜ் வர்மா மீது வழக்குப்பதிந்தனர். இந்த  வழக்கு தண்ட்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ் மனோஜ் வர்மாவின் ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் மனோஜ் கைது செய்யப்பட்டார். 

   

  இந்த  சம்பவத்துக்குப் பிறகு மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் அவரது தந்தை சிவபிரசாத் கூறியுள்ளார்.