மாணவியின் அறையில் மாணவன்..கட்டிலுக்கு அடியில் இருந்து கையும் களவுமாக பிடித்த பாதுகாவலர்கள்!

  0
  1
  ஆந்திரா

  அரசு  பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் 6 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். 

  ஆந்திராவின் நுஜிவீடு பகுதியில் ராஜீவ்காந்தி யுனிவர்சிட்டி ஆஃப் நாலெட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற பிரபலமான அரசு  பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் 6 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். 

  ttn

  இந்நிலையில்  மாணவிகளுக்கான தங்கும் விடுதியில்  ஒரு குறிப்பிட்ட மாணவியின் அறைக்கு மாணவர் ஒருவர் வந்து செல்வதை சக மாணவிகள் பார்த்து எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்காததால் மாணவியையும்  சம்மந்தப்பட்ட மாணவரையும்  கையும் களவுமாக பிடித்துக் கொடுக்கத் திட்டமிட்ட  மாணவிகள் நேற்று முன்தினம் மாலை அவர்களை அறையில் பூட்டுப்போட்டு  விட்டு சென்றுள்ளனர்.

  tt

  இதை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாவலர்கள் பூட்டை உடைத்து அறையில் சென்று பார்த்தபோது மாணவி மட்டுமே இருந்துள்ளார். இருப்பினும் அறையிலிருந்த  ஒவ்வொரு கட்டிலையும் தூக்கிப் பார்த்தபோது ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவன் பதுங்கியிருந்தார். 

  tt

  இதுகுறித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாணவியின் அறைக்கு மாணவன் ஏன் சென்றார் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது. இதற்கான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை வெளியிட்ட பணியார்லர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.