மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து ஆபாசம்… இரெவெல்லாம் தொல்லை தரும் கல்லூரி நிர்வாகி..!

  0
  1
  கல்லூரி

  அரசு பொறியியல் கல்லூரிக்கு எதிரே மாணவிகள் விடுதியும், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பும் இருப்பதால், மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

  தென்னகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரியில் ஒன்றான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை. அரசு பொறியியல் கல்லூரிக்கு எதிரே மாணவிகள் விடுதியும், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பும் இருப்பதால், மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

  சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து முக்கிய பொறுப்பில் உள்ளவர் இரட்டை அர்த்தத்தில் பேசினார் என்பது விசாகா கமிட்டி விசாரிக்கும் அளவுக்கு சென்றது. இருப்பினும் கல்லூரியின் மானம் கருதி அதை வெளிவிடாமல் பேராசிரியர்கள் அமைதி காத்தனர். எதிர்கால தூண்களான மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அந்த முக்கிய நபரே வேலியை மேய்ந்த பயிராக மாறியதுதான் இப்போது கல்லூரியில் ஹாட் டாபிக். 

  college

  கல்லூரி முதல்வர் குடியிருப்புக்கு முறைகேடாக மின் இணைப்பு பெற்ற விவகாரம் தற்போது மின்வாரிய விஜிலென்ஸ் விசாரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. தில்லையில் நடனமாடும் தெய்வத்தின் பெயர் கொண்ட கல்லூரியின் அந்த பொறுப்புவாய்ந்தவர், குடியிருப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, விடுதியில் இருந்து மின் இணைப்பை பெற்று கடந்த 6 மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளார்.

  college

  குளிர்சாதனங்கள், வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர், டிவி என மின்சார திருட்டு மிதமிஞ்சிய நிலையில், கல்லூரி வட்டாரமே மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் மேல் புகார் அனுப்பியது. விளைவு மதுரையில் உள்ள மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு, மின்திருட்டை கண்டுபிடித்துள்ளனர். பயிரை காக்க வேண்டிய வேலியே நடத்தும் விளையாட்டுக்களை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியினர் தவிக்கின்றனர்.