மாணவிகளை தொட்டுப் பேசுவதுதான் அவர் வேலையே: பேராசிரியருக்கு எதிரான மாணவர் போராட்டம்

  13
  collector

  கல்லூரி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் இளங்கோவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கரூர் தான்தோன்றிமலையில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறைக்குத் தலைவராக இருப்பவர் பேராசிரியர் இளங்கோவன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

  harassement

  இதையடுத்து கல்லூரி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் இளங்கோவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கத் திரண்டனர்.

  harass

  இதுகுறித்து அக்கல்லூரி மாணவர் ஒருவர், மாணவிகளை தொட்டுப் பேசுவதையே அவர் வேலையாக வைத்திருந்தார். ஆசிரியர் என்பதால் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இந்நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளின் புகார் பெறப்பட்டு, பேராசிரியர் இளங்கோவன் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  இதையும் வாசிங்க

  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

  தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

  ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்