மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? – உசுப்பேத்தும் கமல்ஹாசன்

  0
  3
  Kamalhassan

  மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

  மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்லாவரம் தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அப்துல் கலாம் கனவுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய நமது கடமை. கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள், உங்களை வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான். நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் விமானத்தில்  3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது;கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி. 

  Kamalhassan

  விவசாயம்  சரியில்லை என்ற கோபத்துடன் இளைஞர்கள் களத்திற்கு வராமல் முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க வரவேண்டும். விவசாயத்தை கற்க ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுத்து முறையாக கற்றுக்கொண்டு பின்பு வாருங்கள். இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் தான் நாடு வளர்ச்சி அடையும் எனவே திறனை வளர்த்து கொள்ளுங்கள் இசையை பற்றி தெரிந்தால் தான் யார் நல்ல இசையமைப்பாளர் என கூறமுடியும் எனவே திறனை வளர்த்துகொள்ளுங்கள் நாடும் முன்னேற்றம் அடையும்” எனப் பேசினார்.