மாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்… சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்

  21
  bull

  அரியானா மாநிலத்தில் ஒரு குடும்பம் காளை மாட்டின் சாணிக்காக காத்திருக்கிறது.

  அரியானா மாநிலத்தில் ஒரு குடும்பம் காளை மாட்டின் சாணிக்காக காத்திருக்கிறது.

  சிர்ஷா மாவட்டம், கலன்வாலி பகுதியைச் சேர்ந்த ஜனக்ராஜ், அதே ஊரில் சிறுவியாபாரம் செய்துவருகிறார். அவர் அணிருந்திருந்த தங்க நகைகளை கழற்றி சமையல் அறையில் உள்ள டப்பாவில் வைத்திருந்திருக்கிறார். அதை அறியாத அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள், காய்கறி கழிவுகளை அதனுள் கொட்டி, வீட்டுக்கு வெளியே வீசி இருக்கின்றனர். வழக்கம் போல அங்கே சுற்ற திரிந்த மாடு ஒன்று, அந்த காய்கறி கழிவுகளை சாப்பிட்டுள்ளது. மீண்டும் வீட்டிற்குள் வந்த ஜனக்ராஜ் அந்த டப்பாவை தேடியுள்ளார் ஆனால் காணவில்லை. உடனே வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டப்போது அது குப்பையில் வீசப்பட்டது தெரியவந்தது.

  BulL

  இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஜனக்ராஜ் தமது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது காய்கறி கழிவுகளுடன், நகைகளையும் மாடு, சாப்பிட்ட விஷயம் தெரியவந்தது. அந்த மாட்டை 5 மணி நேரம் தேடலுக்கு பிறகு கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்து அந்த மாடு சாணி போடும் வரை அருகிலேயே அமர்ந்திருக்கின்றனர்.