மலை போல் கடன்! உலகின் மொத்த கடனில் 15 சதவீதத்துக்கு இவங்கதான் காரணம்……

  23
  நெஸ்லே இந்தியா தயாரிப்புகள்

  சீனாவின் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசு வாங்கிய மொத்த கடன் 40 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாக வாஷிங்டனை சேர்ந்த தனியார் நிதிசேவை நிறுவனமான ஐ.ஐ.எப். கூறியுள்ளது.

  சாமனிய மனிதன் முதல் பெருங் கோடீஸ்வரர்கள் வரை எல்லோரும் தங்களது தேவைக்காக கடன் வாங்கி இருப்பர். அதேபோல்தான் ஒரு நாடும் தனது வளர்ச்சிக்காக கடன் வாங்கும். அதேசமயம் ஒவ்வொரு நாட்டின் கடனும் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அந்நாட்டின் கடன் தரமதிப்பீடு குறையும். தரமதிப்பீடு குறையும் போது அந்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயங்குவர்.

  சீனா

  கடன் வாங்குவதில் சீனர்களை யாரும் அடித்து கொள்ள முடியாது போல் தெரிகிறது அந்நாட்டின் கடன் அளவை பார்க்கும்போது. ஐ.ஐ.எப். வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் காலாண்டின் இறுதி நிலவரப்படி சீனாவின் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு வாங்கிய மொத்த கடன் 40 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 303 சதவீதமாகும். சென்ற ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் இது 297 சதவீதமாக இருந்தது. மேலும், சீனாவின் மொத்த கடன் உலக கடனில் 15 சதவீதமாகும் என கூறப்பட்டுள்ளது. 

  ஐ.ஐ.எப்.

  சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஜூன் காலாண்டில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.2 சதவீதமாக குறைந்தது. முதலீடுகளில் மலர்ச்சி ஏற்படுத்தவும், வேலை வாய்ப்பை பாதுகாக்கவும், தள்ளாடும் சிறு நிறுவனங்களுக்கு  வங்கிகள் அதிக கடன் கொடுப்பதையும் சீன அரசு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.