மலையில் 11 நாட்களாக பதுங்கி இருந்த சீன இளைஞர் – திருவண்ணாமலையில் பிடிபட்டார்

  0
  1
  Chinese youth caught

  திருவண்ணாமலை மலையில் பதுங்கி இருந்த சீன இளைஞர் போலீசாரிடம் பிடிபட்டார்.

  தி.மலை: திருவண்ணாமலை மலையில் பதுங்கி இருந்த சீன இளைஞர்  போலீசாரிடம் பிடிபட்டார்.

  திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் மலையில் வெளிநாட்டு நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து அந்த வெளிநாட்டு நபரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக மலைக் குகை ஒன்றில் மறைந்திருந்த 35 வயது யங்ரூயி என்ற சீன இளைஞர் போலீசாரிடம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து அந்த சீன இளைஞர் ரமண ஆசிரமம் முன்புள்ள சிறப்பு உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

  ttn

  சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் தாக்கியது. எனவே இந்த இளைஞரும் சீனாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டார். இவரது பரிசோதனை முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அதனால் இந்த சீன இளைஞரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.