மலேசியாவை தொடர்ந்து துருக்கிக்கு வேட்டு வைக்க தயாராகும் மோடி அரசு….

  0
  7
  துருக்கி அதிபர் எர்கோடன்

  மலேசியாவை தொடர்ந்து தேவையில்லாமல் இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் துருக்கிக்கு ஆப்பு வைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பாகிஸ்தானுக்கு பல்வேறு விஷயங்களில் துருக்கி நாடு ஆதரவாக இருந்து வருகிறது. உதாரணமாக, தீவிரவாத நிதி தடுப்ப அமைப்பான நிதி செயல் பணி குழு, தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை மற்றும் நிதியுதவியை தடுக்க ஆர்வம் காட்டவில்லை என பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்தது. பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு துருக்கி தனது வருத்தத்தை தெரிவித்தது.

  பாகிஸ்தான்

  தீவிரவாதிகளை வளர்த்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கிக்கு பாடம் புகட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தடை விதிப்பதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு யோசனை செய்து வருகிறது. அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஸ்டீல் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. துருக்கியிலிருந்து இறக்குமதி செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

  மகாதிர் முகமது

  முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில், அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற தடை விதித்தது. இதனால் நம் நாட்டு எண்ணெய் வர்த்தகர்கள் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்தி விட்டனர். இதனால் மலேசிய பாமாயில் வர்த்தகர்கள் கடும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.