மலக்குழி உயிரிழப்பில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு : மு.க ஸ்டாலின் ட்வீட்!

  0
  1
  MK Stalin

  ரஞ்சித்தைக் காப்பாற்ற உள்ளே இறங்கிய அருண் குமார் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தார்.

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நேற்று அதிகாலை கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக அருண் குமார், ரஞ்சித் குமார் உட்பட 5 பேர் சென்றனர். அப்போது குழிக்குள் இறங்கிய ரஞ்சித் குமார் விஷவாயு தாக்கியதால் மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து, ரஞ்சித்தைக் காப்பாற்ற உள்ளே இறங்கிய அருண் குமார் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தார்.

  Arun kumar

  இவ்வாறு, தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்து கொண்ட உள்ளன. இதனைத் தடுக்க எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும், போதிய உபகரணங்கள் இல்லாததால் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை. 

   

  இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழிவுகளை அகற்றும் பணியில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 206 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பில் தமிழகம் தான் முதலிடம் என்பது நாம் அனைவருக்கும் தலைகுனிவு. இந்த சமூக அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது. நவீன கருவிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். மனித மாண்பு காக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.