மறுமணம் செய்ய இடையூறாக இருந்த 2 மாத குழந்தை.. ‘கழுத்தை நெரித்துக் கொலை’ செய்த தாத்தா : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

  0
  1
  Banu's father

  கணேசன் என்பவரும் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பைரோஸ்பானு என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

  நாகை மாவட்டம் மயிலாடுதுறை கணேசன் என்பவரும் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பைரோஸ்பானு என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தையும், 2 மாத பெண் குழந்தையும் இருக்கிறது. கணேசன் வேறு மதம் என்பதால்,  பைரோஸ்பானுவின் அப்பா இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

  ttn

  கடந்த சில நாட்களுக்கு முன், தன் பெற்றோர்களைப் பார்ப்பதற்காகக் கணேசன் மயிலாடுதுறைக்குச் சென்றிருந்துள்ளார். அப்போது அவருக்கு போன் செய்த பானு, குழந்தை உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகத்  தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை கழுத்தை நெறித்து கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் பானுவையும் அவரது குடம்பதினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

  ttn

  அதில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது கணேசன் இருக்கும் போதே பானுவின் அப்பா அவரை வேறொருவருக்கு மறுமணம் செய்ய முடிவு செய்திருந்ததும், அதற்கு இடையூறாக அந்த குழந்தையைக் கொலை செய்து விடலாம் என்று முடிவு செய்து கணேசன் ஊருக்குச் சென்ற நேரமாக பார்த்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், பானுவின் அப்பா உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.