மருத்துவர்களுக்கு தலா நான்கு என்95 மாஸ்க்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

  20
  Ramadoss

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் உள்ள மாவட்டங்களில், கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இப்படி ஆய்வு செய்யும் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

  வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு தலா நான்கு என்95 மாஸ்க் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் உள்ள மாவட்டங்களில், கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இப்படி ஆய்வு செய்யும் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

  doctors-with-mask

  டாக்டர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மருத்துவத் தேவைக்கான உதவி எண் 104-ல் அழைக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை சோதிக்கும் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களுக்கு N-95 முகக்கவசங்களை வழங்க வேண்டும்!
  N-95 முகக்கவசங்களை சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் என்பதால் கொரோனா சோதனைப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு மருத்துவருக்கும் குறைந்தது 4 கவசங்களை வழங்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.