மருத்துவமனையில் அரங்கேறிய மந்திரவாதி சடங்கு! பாம்பு கடிக்கு நிர்வாண மந்திர சிசிச்சை!!

    0
    11
    Dunzo delivery

    பாம்புக்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மந்திரவாதியை அழைத்துவந்து சடங்கு செய்யப்பட்ட விநோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.   

    போபால் அருகேவுள்ள தமோ மாவட்டத்துக்குட்பட்ட பத்தியாகர் என்ற இடத்தில் இம்ரதி தேவி என்ற பெண்ணுக்கு பாம்பு கடித்துள்ளது. உடனே அவர் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் மந்திரவாதியை அழைத்துவந்து நிர்வாணமாக்கி சில சடங்குகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, இச்சம்பவம் நடந்தது எங்களுக்கு தெரியாது என அலட்சியமாக பதிலளித்துள்ளனர். மருத்துவமனையிலிருந்த சிசிடிவி கேமராவை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.