மருதுபாண்டியர் சிலைகள் பற்றிப் பரவும் வதந்தி!

  0
  4
  மருதுபாண்டியர் சிலைகள்

  வதந்திகளின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்றும்,அரசியலில் அது ஒரு வலிமையான ஆயுதம் என்று கௌடில்யனே அர்த்த சாஸ்த்திரத்தில் சொல்லி இருக்கிறான்.ஆனால்,இனைய உலகில் அது பெரும்பாலும் சாதிச் சண்டைகள்,மதகலவரங்களைத் தூண்டவும்,தனி மனித தாக்குதலுக்கும் மட்டுமே பயன்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு வதந்தி கிளம்பி இருக்கிறது.

  statue

  மருது சகோதரர்களின் இரண்டு வெண்கலச் சிலைகள் குப்பையில் கிடப்பதாக யாரோ ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.அதை மலேசியாவில் இருக்கும் கிளாங் பள்ளத்தாக்கு முக்குலத்தோர் சங்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு ஞாயம் கேட்கிறது.

  ராமு சீனிவாசன் என்பவர் அந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிடுகிறார்.
  விசாரித்ததில் அனைத்துமே தவறான பதிவுகள் என்று தெரிகிறது.
  முதல் அதிர்ச்சி அது ஒரு பழைய படம்.இது குறித்து கடந்த ஆண்டே சிவகங்கை அரசு அருங்காட்சியகத்துக்குள் மருதுபாண்டியர் சிலைகள் குப்பையில் கிடப்பதாக செய்தி பரவி இருக்கிறது.

  அதுகுறித்து அப்போதைய அருங்காட்சியக காப்பாளராக இருந்த பக்கிரிசாமி என்பவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருக்கிறார்.அங்கே கிடப்பவை சிலைகள் அல்ல.திருப்பதூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் வைப்பதற்காக சிலைகள் செய்ய பயன்படுத்திய அச்சுக்கள் அவை.சிலை செய்து முடிந்த பிறகு இந்த அச்சுக்கள் சேதம் அடைந்து விட்டதால் அவற்றை வெளியே வைத்திருக்கிறோம் என்று விளக்கமளித்து இருக்கிறார்.அந்தச் செய்தி அப்போதே பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இது போன்ற வதந்திகளைப் பரப்பி மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதை தவிருங்கள்.