மரபை உடைத்தெறிந்த தமிழிசை… தெலுங்கானாவில் தடாலடி..!

  10
  தமிழிசை சவுந்தர ராஜன்

  மரபை உடைத்து எறிந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  மரபை உடைத்து எறிந்த  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு பெண் டாக்டரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில கவர்னரான தமிழிசை பெண் டாக்டர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பியிருக்கிறார். அதற்கு கவர்னர் அலுவலக அதிகாரிகள், கவர்னர் நேரடியாக போவது மரபு கிடையாது. 

  tamilisai

  அந்த குடும்பத்தை, கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆறுதல் சொல்லுங்கள் என ஆலோசனை கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு தமிழிசை, ‘இதற்கெல்லாம் மரபு பார்க்க வேண்டிய அவசியமில்லை. துக்கத்தில் இருக்கிற அவர்களுக்கு நேரில் போய் ஆறுதல் சொல்வது தான்முறை’ என டாக்டர் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.  இதற்காக தமிழிசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.