மரண பயத்தை காட்டும் கொரோனா வைரஸ்……பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு…. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251ஆக அதிகரிப்பு..

  0
  5
  நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

  கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,251ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

  நம் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்தது. மேலும், சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  கொரோனா வைரஸ்

  நேற்று இரவு 11 மணி நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251ஆக உயர்ந்துள்ளதாக முன்னணி ஆங்கில செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலுக்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள டாப் 5 மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

  நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

  மாநிலங்கள்    பாதித்தவர்கள் எண்ணிக்கை
  கேரளா                           202
  மகாராஷ்டிரா              198    
  டெல்லி                          87
  கர்நாடகா                      83
  உத்தர பிரதேசம்         82