மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து! 

  0
  5
   மன்மோகன் சிங்

  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்படும் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. 

  புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த  எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. 

  manmohan

  முன்னாள் பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி.பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்படும் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. உளவுத்துறையினர், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக ஆலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

  manmohan

  இதன் காரணமாக  மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு அளித்து வந்த வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.  இனிவரும் காலங்களில்  பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டுமே எஸ்பிஜிபாதுகாப்பு நீடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.