மனைவி.. துணைவி.. இணைவி… இதுதான் திமுக வரலாறோ..? துக்கப்பட்டு துயரப்படும் விமர்சனம்..!

  0
  4
  உதயநிதி

  எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும்வரை நான் முதலமைச்சராக இருக்கிறேனே என்று கெஞ்சிக் கூத்தாடிய கதை.

  2021ல் தமிழகம் திமுகவின் பிடியிலிருந்து முழுமையாக மீட்கப்படும் என அரசியல் விமர்சகர் மகேந்திரன் விமர்சித்துள்ளார்.

  இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில், ‘’தமிழா வெட்கப்படு..! வேதனைப்படு..! துக்கப்படு..! துயரப்படு..! புனைகதைகளே… உன் பெயர்தான் திமுக வரலாறோ?! ஓடாத ரயில் முன்னே படுத்து விட்டு கல்லக்குடி கொண்டான் என்று கிரீடம் சூட்டிக் கொண்ட கதை.

  stalin

  பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் இடையில் பாளைச் சிறையில் கொடுமைகளை அனுபவித்ததாக புனையப்பட்ட கதை. உதயகுமார் என்ற மாணவனின் உயிர்க்கொடையால் வலிந்து டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்ட கதை. அண்ணாத்துரையிடம் பொய் சொல்லி மோதிரம் பெற்றுக் கொண்ட கதை.

  நெடுந்செழியனை ஏமாற்றி விட்டு எம்.ஜி.ஆர் ஆதரவுடன் முதலமைச்சர் ஆன கதை. ஒன்றை மனைவியாக்கி மற்றொன்றை துணைவியாக்கி மூன்றாவதை இணைவியாக்கி தமிழ்க் கலாச்சாரத்தைக் காத்திட்ட கதை.
  கழகத்தை குடும்பமெனச்சொல்லி, இன்று குடும்பமே கழகமாக மாற்றப்பட்ட அற்புத கதை. மிசா சட்டம் அறிவிக்கப்பட்டு ஏழு மாதங்களுக்குப் பின்னரே எம்.ஜி.ஆருக்காக மிசாவை எதிர்த்த கதை.

  மூன்று மகன்களை விட்டுவிட்டு ஒரு மகனை மட்டும் மிசா காலத்தில் காரணத்தோடு கைது செய்யப்பட்ட மர்மக் கதை. அந்த மகனும் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்ற உண்மைக் கதை. பதவிக்காலம் முழுவதையும் முழுதாக அனுபவித்துவிட்டு அவசரநிலையை எதிர்த்ததால் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக பொய் சொல்லி ஊரை நம்ப வைத்த கதை.

  stalin

  முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற அபகரிப்புக் கதை. தேனை எடுத்த நாங்கள் புறங்கையை நக்காமலா இருப்போம்? என்று ஊழலை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட கதை. எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும்வரை நான் முதலமைச்சராக இருக்கிறேனே என்று கெஞ்சிக் கூத்தாடிய கதை. இந்தியை எதிர்த்துக் கொண்டே பேரனை இந்தியை படிக்க வைத்து மத்திய மந்திரியாக்கிய கதை.

  பராசக்திக்கும் மனோகராவுக்கும் வசனம் எழுதிவிட்டு தன்னை மிகப்பிரபலமான சினிமா வசனகர்த்தா என்று பீற்றிக்கொண்ட கதை.

  ஆயிரம் தமிழ்ப்பண்டிதர்களையும் தமிழை சுவாசித்த அறிஞர்களையும் இருட்ட டிப்பு செய்துவிட்டு தமிழின்
  பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றிய கதை. இப்படி ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வரலாறுகள் என்று திரித்து நமக்கு சொல்லப்பட்டன.

  யாரும் யாரையும் எப்போதுமே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இன்று இவர்களது கதைகளை எல்லாம் மக்கள் புரிந்துகொண்ட காரணத்தினால், பதில் சொல்லத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

  வாரிசு அரசியலை ஊக்குவித்து நடைமுறைப்படுத்திய கட்சி என்பதால் அரசியல் ஞானம் இல்லாத – தலைமைக்கு சற்றும் தகுதியில்லாத வரிசை திணித்த காரணத்தினால் இன்று வலிவிழந்து செல்வாக்கும் குறைந்து விட்ட காரணத்தினால் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

  stalin

  தங்களை நோக்கி பாய்ந்து வரும் கணைகளை தடுக்க முடியாமல் பயந்து நடுங்குகிறார்கள். மக்களை திசை திருப்ப ரஜினி மீது பாய்கிறார்கள். ஐஐடி விவகாரத்தில் மதச் சாயத்தை பூசி பெரிதாக்குகிறார்கள். ஆட்டம் கண்டு விட்டது அவர்களது அரசியல். வீழத் தொடங்கி விட்டதுஅவர்களது செல்வாக்கு. 2021ல் தமிழகம் இவர்களின் பிடியிலிருந்து முழுமையாக மீட்கப்படும். நல்லதையே பேசுவோம். நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.