மனைவி கருத்தரித்ததால் கணவனுக்கு வயிறு உப்பிய விநோத சம்பவம்!!

  0
  7
  Photoshoot

  அமெரிக்காவில் கர்ப்பமாக இருந்த கணவன், மனைவி போட்டோ ஷூட்டின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. 

  ஜாரிட் ப்ரீவர் என்ற நபருக்கும் கெல்சி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கெல்சி தற்போது கர்ப்பமடைந்துள்ளனர். குழந்தை பிரசவிக்க சிக மாதங்கள் இருக்கும் தருவாயில் மனைவி போட்டோஷூட் எடுக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் போட்டோ ஷூட் எடுக்கமுடியவில்லை.. கெல்சிக்கு மருத்துவர்கள் வழங்கி தேதிக்கு முன்னரே குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் கெல்சியின் போட்டோ ஷூட் ஆசை மட்டும் நிறைவேறாமலேயே இருந்தது. 

  Photoshoot

  இதை புரிந்து கொண்ட அவர் கணவர் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அருவியின் பக்கம் நின்று தனது வயிற்றை காட்டி கர்ப்பிணி பெண் போல பல வித கோணங்களில் போட்டோ ஷூட் நடத்தினார். இந்த புகைப்படங்களை கெல்சியிடம் காட்டிய போது அவருக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.