மனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்; கலங்க வைக்கும் சம்பவம்!

  0
  6
   கார்த்திகேயன் -பாரதி

  மனைவி இறந்ததால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மதுரை: மனைவி இறந்ததால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மதுரை கோவில் பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பாரதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதல் திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து இவர்களிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இவர்களுக்குச் சபா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது மகன் உள்ளார். 

  murder

  கார்த்திகேயன் தன்னுடைய மனைவி மகனுடன் எஸ்.எஸ்.காலனி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே  பாரதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது கை, கால் செயல் இழந்து படுத்த படுக்கையாகியுள்ளார்.இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போயுள்ளது. 

  இந்நிலையில்  அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி ஆசைத்தம்பி என்பவர்  குடியிருப்பு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாகி பார்த்தபோது கார்த்திகேயன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்ட அறையில் பாரதியும், அவருடைய மகன் சபாவும் பிணமாக கிடந்தது தெரியவந்தது. மூவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு ணைப்பி வைத்தனர். மேலும் கார்த்திகேயன் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. 

  suicide

  அதில், ‘எனது மனைவி அதிகாலை 3 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் நானும் எனது மகனும் சாகப்போகிறோம்’ என்று எழுதியிருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மகனை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்து,  அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.