மனைவியை இப்படியெல்லாம் சந்தோஷமா வெச்சிருக்கணும்…! வைரலாகும் புகைப்படங்கள்!

  0
  2
  கெல்லி-கோடி

  அஞ்சு வருஷம் காதலிச்சோம், பத்து வருஷம் காதலிச்சோம் என்று திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிகள் எல்லாம் திருமணத்துக்கு அப்புறம் அவர்கள் தேக்கி வைத்திருக்கும் காதலை எல்லாம் தொலைத்து விட்டு அஞ்சு மாசத்துலேயே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி நிற்கிறார்கள்.

  அஞ்சு வருஷம் காதலிச்சோம், பத்து வருஷம் காதலிச்சோம் என்று திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிகள் எல்லாம் திருமணத்துக்கு அப்புறம் அவர்கள் தேக்கி வைத்திருக்கும் காதலை எல்லாம் தொலைத்து விட்டு அஞ்சு மாசத்துலேயே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி நிற்கிறார்கள். சாமான்ய மக்களுக்கு தான் பொருளாதார பிரச்சனைகள், உறவுகளால் இம்சை, மாமியார், நாத்தனார் போன்றோருடன் ஒத்து போகாத மனநிலை என்று யோசித்தால், திரையுலகில் முன்னணியில் வலம் வந்து கோடிகளில் சம்பாதித்த த்ரிஷா, செல்வராகவன், யுவன்சங்கர்ராஜா, அமலாபால் வரையில் எல்லா காதல் ஜோடிகளுமே ஹனிமூன் போயிட்டு வந்து அதுக்கப்புறமா விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி நின்றிருக்கிறார்கள். இவர்களது அடுத்தடுத்த திருமணங்கள் நிம்மதியையும் மனமகிழ்ச்சியையும் தருவதாக! 

  kelly and kodi

  விஷயம் என்னன்னா… விவாகரத்து பண்றதைப் பற்றியதல்ல… மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பதைப் பற்றி.. காதலித்து கல்யாணம் செஞ்சாலும் ஏன் தோற்று போகுது? பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு பிறகு பொருளீட்டுவதில் மட்டும் தான் அக்கறை செலுத்துகிறார்கள். ஆசை அறுபது நாள் என்பது மாதிரி, புது பொண்டாட்டி சொல்லும் விஷயத்திற்கு எல்லாம் தலையாட்டும் கணவன்மார்கள், கொஞ்ச நாட்களில் காதலை எல்லாம் மறந்து விட்டு, மனைவியின் ஆசைகளையோ, உடல்நலத்தின் மீதான அக்கறையோ செலுத்துவதில்லை என்கிறது ஆராய்ச்சிகளின் முடிவு.

  kelly and kodi

  இது இப்படியிருக்க, காதலிக்காமலேயே கல்யாணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பிறகு ரொம்ப சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டு வருது ஒரு ஜோடி. அதுவும் நம்ம நாட்ல கிடையாது. விவாகரத்துக்கு பேர் போன வெளிநாட்ல. கெல்லி – கோடி தம்பதிகளின் வாழ்க்கை அனைவருக்குமே கற்றுத் தருகிற பாடம் இது தான். மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தான்! அடிக்கடி மனைவியுடன் சுற்றுலா செல்லும் கெல்லி, மனைவியை அத்தனை சந்தோஷமாக வைத்திருக்கிறார். அந்த சாகசங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவிடுகிறார். இவர்களத் இன்ஸ்டா பக்கத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். 
  சமயங்களில் இவர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாது, தன் பணி கடமையைச் செய்வதே என்று மனைவியுடன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார் கெல்லி. இவர்களின் வலைப்பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களைப் பதிவிடுவதற்காகவே பல நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

  kelly and kodi

  இப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெல்லி-கோடி தம்பதி இந்தோனேசியாவில் உள்ள பாலி பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு இன்பினிட்டிவ் நீச்சல் குளத்தில் ஆபத்தான முறையில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில், உயரமான பகுதியில் நீச்சல் குளத்திற்கு வெளியே தொங்கியபடி கெல்லியை தாங்கிப் பிடிக்கும் புகைப்படமும் ஒன்றாகும். வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படத்துக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா என்பது தான் பல நெட்டிசன்களின் கேள்வியாக இருந்து வந்தது. ஆனால் அவர்களுக்கு தெரியாது, சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், சாகசங்களும் தான் வாழ்க்கையை அழகாக்குகிறது என்று.
  அந்த விமர்சனங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மீண்டும் சுற்றுலா பயணிகளாக பெரு நாட்டிற்குச் சென்ற ஜோடி, பெரு நாட்டில் உள்ள லகுனா ஹுமன்தே பகுதி மலையுச்சியில் கெல்லி தொங்கிய படி பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.  சின்ன சின்ன சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து கேட்டு நின்ற காதல் ஜோடிகள், ஏக்கத்துடன் இவர்களின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.