மனைவியின் துணையுடன் செல்போன் திருடிய தமிழ் நடிகர் கைது 

  0
  1
  கைது

  சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் ஆருண் என்கிற தீபக். விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகராக வேலைச் செய்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவரது மனைவியும் சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் தனியார் செல்போன் கடைக்குச் சென்றிருக்கிறார்கள்.

  mobile

  விலையுயர்ந்த செல்போன்களைப் பார்ப்பது போல் நடித்து, ஊழியர்கள் திரும்பும் நேரத்தில் விலையுயர்ந்த செல்போன்களைத் திருடியிருக்கிறார்கள்.
  கடைக்கு செல்போன் வாங்க வந்த இரண்டு பேர், ஊழியர்களை ஏமாற்றி திருடுவதை, சிசிடிவி கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள், செல்போன் திருட்டில் ஈடுபட்ட துணை நடிகரையும், அவரது மனைவியை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். 

  போலீசாரின் விசாரணையில், இவர்கள் சென்னையின் பிரபலமான பல செல்போன் கடைகளில் நுழைந்து, செல்போன்களை கொள்ளையடிக்கும் சிசிடிவி பதிவுகளும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தீபக் மற்றும் அவரது மனைவியை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்