மனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்!

  0
  3
  rape

  ஓமலூர் அருகே மனைவியின் தங்கையை கடத்திச்சென்று கர்ப்பமாக்கிய கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

  ஓமலூர் அருகே மனைவியின் தங்கையை கடத்திச்சென்று கர்ப்பமாக்கிய கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

  சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி தாலுக்காவில் தாராபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணி, கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறிகடத்திசென்று திருமணம் செய்துகொண்டார். மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததை தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார்,போக்சோ,பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்கில் மணியை கைது செய்தனர். பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த மணி, திருமணம் செய்துகொண்ட 12-ம் வகுப்பு மாணவியுடன் மீண்டும்  குடும்பம் நடத்தினார். 

  rape

  இந்நிலையில், மனைவியின் தங்கையான 17 வயது சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், மனைவியின் தங்கையான கொழுந்தியா மீது ஆசை ஏற்பட்டு, அவரையும்காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் திருமணம் செய்யாமலேயே பாலியல் வன்கொடுமை செய்து 12-ம் வகுப்பு மாணவியான சிறுமியை ஐந்து மாத கர்ப்பமாக்கினார். இதையடுத்து, மாமனார் வீட்டுக்குச்சென்ற மணி உனது, இரண்டாவது மகளை திருமண செய்துகொள்வதாகவும், தடுத்தால் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து அன்று இரவே அந்த மாணவியுடன் தலைமறைவானார். 

  இதையடுத்து மாணவியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேட்டூரில் தங்கியிருந்த மணியை கைது செய்து மாணவியை மீட்டனர். மேலும், மணி மீது இரண்டாவது முறையாக போக்சோ, பாலியல் வன்கொடுமை செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திசேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.