மனைவியின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு தலைமறைவான கணவர் குடும்பத்தினர்: அதிர வைக்கும் காரணம்!

  0
  1
  வினோதா

  வினோதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

  நாகப்பட்டினம் :  வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே நல்லவிநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசமூர்த்தி. காழியப்பபநல்லூரைச் சேர்ந்த வினோதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

  suicide

  இதனிடையே  வெங்கடேசமூர்த்தி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிவரும் நிலையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் வினோதா குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார் வெங்கடேசமூர்த்தி. 

  இந்நிலையில், வினோதா தூக்கிட்டு இறந்ததாக  அவரது குடும்பத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், வினோதா குடும்பத்தினர் வந்து பார்க்கும் போது சடலத்தை வைத்து விட்டு வெங்கடேசமூர்த்தி குடும்பத்தினர் தலைமறைவாகியது தெரியவந்தது. 

  suicide

  இது குறித்து, புதுபட்டினம் காவல் துறையிடம் வினோதாவின் தந்தை தட்சிணாமூர்த்தி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோதாவின் உடலை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான வெங்கடேசமூர்த்தியையும், அவரது குடும்பத்தினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.