மனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் !

  0
  7
  alienation of affection

  அமெரிக்காவில் மனைவியின் கள்ளக்காதலனால் விவாகரத்து செய்யப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அமெரிக்காவில் கெவின் ஹோவர்ட் என்பவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கணவர் வேலையில் அதிக நேரம் செலவிடுவதாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதில்லை எனவும் கூறி அவரது மனைவி சமீபத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

  alienation of affection2

  இது ஒரு பிரச்சனையே அல்ல பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இதற்காக விவகாரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கெவின் தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவரின் இந்த சமரசத்தை மனைவி ஏற்கவில்லை. இதையடுத்து மனைவி மீது சந்தேகம் அடைந்த கெவின் விவகாரத்திற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் முடிவு எடுத்தார். இதற்காக தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடினார். கெவின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கணவரை விவகாரத்து செய்துவிட முடிவு செய்துள்ளதாகவும் அந்த துப்பறியும் நிறுவனம் அறிக்கை அளித்தது.

  alienation of affection1

  எனவே தன்னுடைய மனைவி பிரிந்து செல்வதற்கு அவருடைய கள்ளக்காதலனே என்பதை உறுதி செய்த கெவின் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன்னுடைய திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய காரணமாக இருந்த நபர் மீது ஆலிநேஷன் ஆப் அபெக்ஷன் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார். ஹவாய், மிசிசிப்பி, நியூ மெக்ஸிகோ, தெற்கு டகோட்டா மற்றும் உட்டா  பகுதிகளில் மட்டும் அமலில் உள்ள இந்த சட்டப்படி, ஒருவர் தனது திருமண முறிவுக்குக் காரணமான மூன்றாம் நபர் மீது வழக்குத் தொடரலாம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமண முறிவுக்குக் காரணமான அந்த நபர் கெவினுக்கு 7 லட்சம் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற சட்டம் வந்தால் அடுத்தவர் மனைவியை கள்ளக்காதலர்கள் ஏறெடுத்து பார்க்கமாட்டார்கள். கணவர்களும் இதுபோன்று செயல்களில் ஈடுபடும் மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்லமாட்டார்கள், நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடுவார்கள்.