மனித கம்பியூட்டராக நடிக்கத் தயாராகும் நடிகை வித்யாபாலன்..!

  19
  சகுந்தலா தேவி - வித்யா பாலன்

  அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என பலரது நிஜ வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் தற்போதெல்லாம் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிகமாகி வருகிறது.

  கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று கதையில் வித்யா பாலன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

  வித்யா

  அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என பலரது நிஜ வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் தற்போதெல்லாம் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. இதில் வித்யா பாலன் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

  balan

  கணித மேதை சகுந்தலா தேவி, மனிதக் கணினி ( human computer) என அழைக்கப்படுபவர். 1982-ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். கணிதம் மட்டுமின்றி ஒருபால் ஈர்பாளர்கள் பற்றி ஆய்வு செய்து எழுதியவர். The World of Homosexuals என்ற அவருடைய புத்தகம் இந்தியாவில் ஒருபால் ஈர்ப்பாளர்கள் பற்றிய முதல் ஆய்வுத் தொகுப்பாகும்.

  vidya

  சகுந்தலா தேவியின் கதையை அனு மேனன் இயக்குகிறார். வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ படத்தை தயாரித்த விக்ரம் மல்ஹோத்ரா இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் நடிப்பது குறித்து வித்யா பாலன், “சகுந்தலா தேவி போன்ற ஆளுமையின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் ஆர்வமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. அவர் ஒரு தைரியமான பெண்மணி, பெண்ணியவாதி, கணித மேதை ஆவார். கணித மேதைகளில் நகைச்சுவை உணர்வான ஆட்களை பார்ப்பது சிரமம், அந்த எண்ணத்தை மாற்றியவர் சகுந்தலா. விக்ரம் மல்ஹோத்ரா இந்த படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

  vidya

  இந்த படத்துக்காக ஒருபால் ஈர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை வித்யா படித்து வருகிறாராம்! அதேபோல் கணிதம் மேதைகள் சிலரை சந்தித்து பேசும் முடிவில் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.