மனநலம் பாதித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

    10
    Child Abuse

    சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர். 

    சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர். 

    சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த  மனநலம் பாதிப்படைந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பிளம்பிங் கடையில் வேலை பார்த்து வருபவர் கடலுார் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47). சிறுமியை குடிபோதையில் தன் மடியில் வைத்துக் கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் பெரியம்மா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பாலகிருஷ்ணனை பிடித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.