மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வெட்டிக்கொன்ற தந்தை : ஊரடங்கில் நடந்த பரபரப்பு சம்பவம்!

    0
    4
    மதுரை

    26 வயதான இவருக்கு மனநலம் பாதிக்கபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இவரை  வீட்டிலேயே வைத்து கண்காணித்து வந்துள்ளனர். 

    மதுரை வண்டியூர் அடுத்த நேதாஜிநகரை சேர்ந்தவர் அருண்குமார். 26 வயதான இவருக்கு மனநலம் பாதிக்கபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இவரை  வீட்டிலேயே வைத்து கண்காணித்து வந்துள்ளனர். 

    tt

    இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அருண்குமார்  நேற்றிரவு  ஆவேசமாக தனது தாய் மற்றும் தந்தை முத்துகுமாரை  தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் வலியால் துடித்துள்ளனர்.  ஒருக்கட்டதில் ஆத்திரம் தாங்க முடியாமல் அருண் குமாரை அவரது தந்தை கோடாரியால் தலையில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

    t

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தந்தை முத்துகுமாரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.