மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த 7 சிறுவர்கள்..?!

  0
  7
  Rape

  கேரளாவைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவள் ராமநாதபுரத்தில் உள்ள ஏர்வாடி அருகே இருந்துள்ளார்.

  கேரளாவைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவள் ராமநாதபுரத்தில் உள்ள ஏர்வாடி அருகே இருந்துள்ளார். அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அந்த பெண்ணை காட்டுப்பள்ளி என்னும் பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். சிறிது காலமாக, அங்கேயே இருந்து வந்த அந்த பெண் திடீரென கடந்த 4 ஆம் தேதி காப்பகத்திலிருந்து காணாமல் போகியுள்ளார். காப்பகத்தில் இருப்போர் அந்த பெண்ணை அப்பகுதி முழுவதிலும் தேடியுள்ளனர். ஆனால், அந்த பெண் எங்கேயும் இல்லை. 

  Girl

  இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண் சாலையோரம் மயக்க நிலையிலிருந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணை மீண்டும் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வெகு நேரமாக மயக்க நிலையிலேயே இருந்ததால் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில், அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்ட காப்பக பாதுகாப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

  Rape

  இது குறித்து நடந்த விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்கள் கடந்த 7 ஆம் தேதி அன்று இரவு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, அந்த சிறுவர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

  Police

  அந்த சிறுவர்கள் தான் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்களா அல்லது அவர்கள் மூலம் வேறு யாராவது இதில் ஈடுபட்டுள்ளனரா என்று அந்த சிறுவர்களிடம் கடும் விசாரணை நடத்தி வருகின்றனர்.