மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் : ஹெச்.ராஜா பேட்டி !

  0
  1
  anna salai

  , 2020-21 ஆண்டிற்கான இன்று நடைபெறும் மத்திய பட்ஜெட் தாக்கல் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்காக என்றும் இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

  சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தைக் கிளப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் அமைப்புகள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த சட்டம் திரும்ப பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அதே போல ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

  ttn

  அந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப் படுவதாகவும், இந்த போராட்டத்துக்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார். அதனைத்தொடர்ந்து, 2020-21 ஆண்டிற்கான இன்று நடைபெறும் மத்திய பட்ஜெட் தாக்கல் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்காக என்றும் இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.