மத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ் மகன்… என்ன இலாகா தெரியுமா..?

  0
  1
  ஓ.பி.எஸ்

  ரவீந்தர்நாத் வெற்றிபெறும் சூழலில் அவருக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

  குழந்தை பிறக்கும் முன்பே பெயர் வைத்த கதையாக இருக்கிறது அரசியல் கட்சிகளின் நிலை. கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்து பாஜக தடபுடலாக விருந்து வைத்து வருகிறது. எதிர்கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு டெல்லியில் லாபி செய்து வருகிறார்கள் பலரும்.

   opr

  நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில்  தேனி தொகுதியில் களமிறங்கியுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமார் வெற்றிபெறுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.எப்போதுமே தனி பெரும்பான்மை இருந்தாலும் பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகளை கொடுத்து ஆட்சியில் பங்கெடுக்க வைப்பது வழக்கம்.ravindran

  அப்படி ரவீந்தர்நாத் வெற்றிபெறும் சூழலில் அவருக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தொலை தொடர்பு துறை , அல்லது நுகர்வோர் விவகாரங்கள் துறை, அல்லது ஜவுளி துறை வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கள் பாஜக மற்றும் அதிமுக வட்டாரங்களில் அடிபடுகின்றன.ravindran
   
  இவை அனைத்தும் ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டுமே  நடக்கும். ஆனால், எப்படியும் நிச்சயம் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெறுவார் என்ற அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தைகள் டெல்லி வரை சென்றுள்ளதாம். ஆனால் எதிர்தரப்பினரோ நிச்சயம் நாங்கள்தான் தேனியில் வெற்றிபெறுவோம், ரவீந்திரநாத் கனவு மட்டுமே காணலாம் என நமச்சல் புன்னகை காட்டி வருகிறார்கள்.