மத்திய அமைச்சராகிறார் ஓ.பி.எஸ் மகன்… தனியொருவனாய் தட்டித் தூக்கிய ஓ.பி.ரவீந்திரநாத்!

  0
  2
  ஓ.பி.எஸ்

  அதிமுக நிச்சயம் பாஜக அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தின் பிரதிநிதியாக ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் மோடிக்கு உள்ளது.

  ஒற்றை மனிதனாய் அதிமுகவை காப்பாற்றிய ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் பட்டியலில் இடம்பெறுகிறார்.

   நாடு முழுவதும் பாஜக தனித்து 303 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். நாடு முழுவதும் பாஜகவிற்கு சாதகமான அலை வீச தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டங்களுக்கு ஆதரவான அலை வீசியது.OPR

  இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். கோவை, ராமநாதபுரம், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை நிச்சயம் அதிமுக கூட்டணி வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளன.

  விதிவிலக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்ட தேனி தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் ஒற்றை ஆளாக நாடாளுமன்றம் செல்கிறார்.OPR

  பாஜக தனித்தே ஆட்சியை பிடித்தாலும் தனது கூட்டணி கட்சிகளுக்கு நிச்சயம் ஆட்சியில் பங்களித்து அவர்களையும் அரவணைத்து செல்லும். அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக ஏற்படுத்திய கூட்டணி சிவசேனா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அடுத்து மூன்றாவது பெரிய கூட்டணி.opr

  எனவே அதிமுகவிற்கு என்று நிச்சயம் பாஜக அமைக்கும் அமைச்சர் பட்டியலில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.  தமிழகத்தின் பிரதிநிதியாக ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் மோடிக்கு உள்ளது. இதனால்,  ரவீந்திரநாத்திற்கு தொலை தொடர்புத்துறை அல்லது ஜவுளித்துறை ஒதுக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.