மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் : பத்து நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு..

  25
  Tasmac

  டிச.1 முதல் 10 ஆம் தேதி வரை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

  திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பிறகு, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது. டிசம்பர் 10-ம் தேதி கோயில் வளாகத்தில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் பிரசித்தி பெற்ற மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர். 

  deepam

  கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கவும் ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட உள்ளனர். கார்த்திகை தீப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

  tasmac

  இந்நிலையில்,  திருவண்ணாமலையில் தீபத்திருநாளை முன்னிட்டு டிச.1 முதல் 10 ஆம் தேதி வரை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.