மது கிடைக்காமல் பரிதவிக்கும் குடிமகன்கள்…… தினமும் ரூ.700 கோடி வருவாயை இழக்கும் மத்திய அரசு…

  0
  1
  மதுபான கடைகள் அடைப்பு

  நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், தினமும் ரூ.700 கோடி வருவாயை மத்திய அரசு இழந்து வருவதாக தகவல்.

  மதுபானங்கள் மீதான கலால் வரியால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் வருமானம் வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு்ளளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

  மதுபான கடை

  இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் குடிமகன்கள் பரிதவித்து வருகின்றனர். அதேசமயம் மத்திய அரசுக்கு மதுபானங்கள் உற்பத்தி,உரிமம் மற்றும் விற்பனைக்கு விதிக்கப்படும் கலால் வரி வாயிலான வருவாய் பாதித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு தினமும் ரூ.700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல். அதேசமயம் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை நின்றவிடவில்லை மாறாக சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை அதிகரிதுள்ளதாக மதுபான துறை தெரிவித்துள்ளது. 

  பார்கள்

  இந்திய சர்வதேச ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின்ஸ் சங்கத்தின் செயல் தலைவர் அம்ரிட் கிரண் சிங் கூறுகையில், மதுபான உற்பத்தியாளர்களின் மொத்த வருவாயில்  50 சதவீதம் ரெஸ்ட்ராண்ட், பார், ஹோட்டல்கள் வாயிலாக கிடைக்கிறது. எஞ்சிய 50 சதவீத வருவாய் நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கிறது. கடைகள் மூடுவதால் மதுபான விற்பனை தடைபடவில்லை. அதேசமயம் கள்ள சந்தை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது மற்றும் சட்டவிரோத அல்லது திருட்டு மதுபானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் உயிர் இழப்புகள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்தார்.

  லாக்டவுனால் மதுபான கடைகள் அடைப்பு

  மதுபான துறை வாயிலாக மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய்

  ஆண்டு    வருவாய்
  2017         ரூ.1.99 லட்சம் கோடி
  2018         ரூ.2.17 லட்சம் கோடி
  2019        ரூ.2.48 லட்சம் கோடி