மது கிடைக்காததால் தூக்க மாத்திரை சாப்பிட்ட நடிகை மனோரமாவின் மகன்!

  0
  3
  manorama family

  மது கிடைக்காததால் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  மது கிடைக்காததால் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி சென்னை தி.நகர் நீலகண்டமேத்தா தெருவில் வசித்து வருகிறார். மதுபழக்கத்திற்கு அவர் அடிமையானவர் என கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. 

   manoramma

  இந்நிலையில் நேற்று இரவு பூபதிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. உறவினர்கள் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பூபதி மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் மது கிடைக்காததால் இரவு தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.