மதுரை பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தல்…!

  0
  2
  Indigo

  வழக்கமாக மழை பெய்தால் விமானச் சேவைகள் சற்று முன் பின்னுமாக இருக்கும்.

  தமிழகத்தில் மழைக்காலம் துவங்கியதால், ஆங்காங்கே மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று இரவு  சென்னை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்தது. வழக்கமாக மழை பெய்தால் விமானச் சேவைகள் சற்று முன் பின்னுமாக இருக்கும். அதனால், இண்டிகோ விமான நிறுவனம் மதுரை விமான பயணிகளுக்கு, இண்டிகோ விமானத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தலை விடுத்துள்ளது. 

   

  அதில், மதுரையில் கன மழை பெய்து வருவதால் பயணிகள் விமானத்தின் பயண நேரத்திற்குச் சற்று முன்பே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் பயணிகள் தங்களது இண்டிகோ விமானத்தின் பயண நேரத்தைக் குறிப்பிட்டுள்ள லிங்க்கின் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

  Indigo