மதுரையை மிரட்டும் அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள்!

  0
  7
  Azhagiri birthday posters

  தி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய ரசாயனத்துறை அமைச்சராகவும் இருந்தவர் மு.க.அழகிரி. தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எதிரான செயல்பாடு காரணமாக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எவ்வளவோ சமாதான முயற்சிகள் மேற்கொண்டும் இவர் மீண்டும் தி.மு.க-வில் சேர்க்கப்படவில்லை. 

  மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி மதுரை முழுக்க அவரது ஆதரவாளர்கள் மிரட்டல் போஸ்டர்களை ஒட்டிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  தி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய ரசாயனத்துறை அமைச்சராகவும் இருந்தவர் மு.க.அழகிரி. தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எதிரான செயல்பாடு காரணமாக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எவ்வளவோ சமாதான முயற்சிகள் மேற்கொண்டும் இவர் மீண்டும் தி.மு.க-வில் சேர்க்கப்படவில்லை. 

  azhagiri-birthday.jpg

  ஒரு காலத்தில் தென் மண்டல தி.மு.க-வின் மையமாக செயல்பட்டவர் அழகிரி. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதியாக உள்ளார். தி.மு.க-வில் செல்வாக்காக இருந்தபோது மதுரையே குலுங்கும் வகையில் இவரது ஆதரவாளர்களின் செயல்பாடு இருந்தது. அதிலும் அழகிரியின் பிறந்தநாளையொட்டி மதுரை முழுக்க அலங்கார வளைவு, தட்டி, ஃபிளெக்ஸ்போர்டு வைப்பது, போஸ்டர் ஒட்டுவது என்று மதுரையே மூக்கின் மீது விரல் வைக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் அலப்பறை இருக்கும்.
  தற்போதும் ஒரு சில அழகிரியின் உண்மை விசுவாசிகள் அவரது பிறந்த நாளையொட்டி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அழகிரியின் பிறந்த நாள் வருகிற 30ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. 
  கழகத்தைக் காக்க வா… தமிழகத்தை மீட்க வா தலைவா, எதையும் தாங்கும் இதயம் – அண்ணா; இதையும் தாங்கும் இமயம் நீயே அண்ணா, அஞ்சாநெஞ்சரே, தொண்டர்கள் எதிர்பார்க்கும் அமைதிப் புயலே என்று விதவிதமான போஸ்டர்கள் மதுரை முழுக்க ஒட்டப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்னும் என்ன என்ன அட்ராசிட்டிகளை அவரது தொண்டர்கள் செய்வார்களோ என்று எதிர்க்கட்சிகள் ஆவலாய் வேடிக்கை பார்த்து வருகின்றன.