மதுரையில் ‘கும்பகோணம் ஐயர் சிக்கன்’ : போராட்டத்தில் குதித்த பிராமண சமுதாயத்தினர்!

  0
  2
  மிளகு ஹோட்டல்

  உணவகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் கடையின் பெயரை  கும்பகோணம் ஐயர் சிக்கன் பெயரில் முகநூலில் விளம்பரப்படுத்தினர்

  மதுரை : கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் விளம்பரம் செய்த உணவகத்தைப் பிராமண சமுதாயத்தினர்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  hotel

  மதுரை வடக்கு மாசி வீதியில் மிளகு ஹோட்டல் என்ற அசைவ உணவகம் இயங்கி வருகிறது.இந்த உணவகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் கடையின் பெயரை  கும்பகோணம் ஐயர் சிக்கன் பெயரில் முகநூலில் விளம்பரப்படுத்தினர். இந்நிலையில்  பிராமண சமுதாயத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திலகர் திடல் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  hotel

  இதுகுறித்து நிர்வாக மேலாளர் ராமநாதன்,  கும்பகோணம் ப்ரைடு சிக்கன் என்று பெயர் பலகையில் போட சொன்னோம். ஆனால் கணிணி ஆபரேட்டர்கும்பகோணம் ஐயர் சிக்கன் என்று  தவறுதலாகப் போட்டுவிட்டனர் என்றும் இதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் 
  முகநூலிலிருந்து சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர். சமீபகாலமாக சில நிறுவனங்கள் நூதன விளம்பரம் செய்கிறோம் என்ற பெயரில் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி கொள்வது குறிப்பிடத்தக்கது.