மதுமிதா தற்கொலை முயற்சிக்குக் காரணம் இவர்கள் தான்: உண்மையைப் போட்டு உடைத்த கஸ்தூரி 

  0
  1
  கஸ்தூரி

  நடிகை கஸ்தூரி சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். 

  சென்னை: நடிகை கஸ்தூரி சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். 

  பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் மதுமிதா அதிரடியாக வெளியேறினார். வீட்டின் விதிமுறைகளை மீறி தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் விட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து மதுமிதா தான் தற்போது சமூக வலைத்தளங்களின் ஹாட் டாபிக் மாறியுள்ளார். அவர் தற்கொலைக்கு முயற்சிக்குக் காரணம் என்ன? பிக் பாஸ் வீட்டில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

  இந்த நிலையில் அவர் அது போன்று ஒரு முடிவு எடுக்க யார் என்பது குறித்து கடந்த வாரம் வெளியேறிய கஸ்தூரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘மதுமிதா பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெரின் மற்றும் லாஸ்லியா தான். 

  madhu

  முக்கியமாகக் காரணம் ஷெரின் தான். மற்றபடி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
  பிக்பாஸ் மக்களுக்கு என்ன கொடுக்கிறது என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் மனிதராகவும் மனித தன்மையுடனும் நடந்து கொள்வது சேரன் மட்டும்தான். மற்றவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.