மதுப்பாட்டில் மூலம் கொலையாளியைப் பிடித்த போலீசார்

  0
  1
  கைது

  காலி மதுப்பாட்டிலின் உதவியால், கொலைக்காரன் ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள் ஹைதராபாத் போலீசார்.  முன்னதாக, நேற்று நிருபர்களிடம் பேசிய சைபராபாத் போலீசார், ‘கீழே கிடந்த காலி மதுப்பாட்டிலின் உதவியால் துப்பு துலக்கி கொலையாளியைக் கைது செய்திருக்கிறோம்.

  காலி மதுப்பாட்டிலின் உதவியால், கொலைக்காரன் ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள் ஹைதராபாத் போலீசார்.  முன்னதாக, நேற்று நிருபர்களிடம் பேசிய ஹைதராபாத் போலீசார், ‘கீழே கிடந்த காலி மதுப்பாட்டிலின் உதவியால் துப்பு துலக்கி கொலையாளியைக் கைது செய்திருக்கிறோம்.

  arrested

  மது பாட்டிலுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்’ என்று தெரிவித்தனர்.
  துப்புரவு தொழிலாளியான ஸ்ரீனு(42) என்பவர் 40 வயதான பத்மம்மாவை தலையில் அடித்துக் கொலை செய்திருக்கிறார். முன்னதாக, ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தின் அருகில் மக்கள் நடமாட்டமில்லாத இடத்தில் மயான பூமி ஒன்று உள்ளது.அங்கு, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொலையான நிலையில் இருந்தார். யார் கொலையாளி, எதற்காக கொலைச் செய்யப்பட்டார்? என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விசாரணையைத் துவங்கிய போலீசார், கொலையான இடத்தில் இருந்த காலி விஸ்கி பாட்டிலை சேகரித்திருந்தனர்.

  bottle

  அந்த காலி மதுபான பாட்டிலில் இருந்த பார் கோட் உதவியினால், அந்த மதுபாட்டில் எந்த இடத்தில் வாங்கப்பட்டிருக்கிறது என்று விசாரணையைத் துவங்கினார்கள்.  பார்கோட் உதவியனால், துப்பறிந்ததில், அந்த மதுபானம் ஷம்ஷாபாத் நகரில் இருக்கும் சப்தகிரி மதுபானக் கடையில் வாங்கியிருப்பதை அறிந்த போலீசார், குறிப்பிட்ட கடைக்குச் சென்று, சிசிடிவி வீடியோவை ஆராய்ந்தனர். சந்தேகப்படும்படியாக அந்த மதுபாட்டிலை வாங்கிய நபரைப் பற்றி விசாரித்ததில், அவர் ஸ்ரீனு எனும் துப்புரவு தொழிலாளி என்பதும், மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் கிடைத்தன.

  muder

  தொடர் விசாரணையில், ஸ்ரீனுவிற்கும், கணவரைப் பிரிந்து வாழும் பத்மம்மாவிற்கும் தொடர்பு இருந்ததாகவும், பத்மம்மா மீது எழுந்த சந்தேகத்தால், அவரை மது அருந்த அழைத்துச் சென்று ஸ்ரீனு கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. கொலை செய்து விட்டு, ரங்காரெட்டி மாநிலத்தில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு தப்பிச் சென்ற ஸ்ரீனுவை போலீசார் கைது செய்தனர்.
  கொலை செய்யப்பட்ட 24 மணிநேரத்தில், காலி பாட்டிலின் உதவியால் கொலையாளியைக் கைது செய்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.