மதத்தால் பிரிவினை ஏற்படுத்தும் தலைவர் பிரதமர் மோடி! விளாசிய பத்திரிகை…

  0
  2
  Time Modi

  இந்தியாவில் மதத்தால் பிரிவினை ஏற்படுத்தும் தலைவர் பிரதமர் மோடி என முகப்பு பக்கத்தில் சுட்டிக்காட்டி அமெரிக்காவை சேர்ந்த டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டது பேசும்பொருளாகியுள்ளது. 

  இந்தியாவில் மதத்தால் பிரிவினை ஏற்படுத்தும் தலைவர் பிரதமர் மோடி என முகப்பு பக்கத்தில் சுட்டிக்காட்டி அமெரிக்காவை சேர்ந்த டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டது பேசும்பொருளாகியுள்ளது. 

  அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கைகளில் ஒன்று  “டைம்ஸ் இதழ்”. சுமார் 2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை டைம்ஸ் கொண்டுள்ளது. இந்த இதழ் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியையும் தேர்வு செய்து கெளரவப்படுத்தியிருந்தது. 

  Modi

  இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் படத்தை அட்டைப்படமாக வடிவமைத்து, இந்தியாவில் மதத்தால் பிரிவிமை ஏற்படுத்தும் தலைவர் என சுட்டிக்காட்டியுள்ளது. எழுத்தாளர் ஆதிஷ் தஸீர் என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் குஜராத்தில் நடக்கும் கலவரம் குறித்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் அவலங்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆட்சிக்காலத்தில் தான் பத்திரிக்கையாளர்களின் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் மதத்தின் பெயரால் நடைபெறும் அநீயாயங்களையும் குறிப்பிட்டுள்ளார். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இதுபோன்று மோடிக்கு எதிராக கட்டுரைகள் வெளியாவது பாஜகவிற்கு பின்னடை ஏற்படுத்துகின்றன