மணிரத்னம் படத்தில் பாலிவுட் மாமனார், மருகள்?

  0
  1
  maniratnam

  இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் சரித்திர கால திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் சரித்திர கால திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்தப்படத்தின் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியன் செல்வன்’ கதையை மையமாக வைத்து திரைப்படமாக எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இது அவரது நீண்ட நாள் கனவு என தெரிகிறது.

  ponniyinselvan

  முன்னதாக இப்படத்தில் தளபதி விஜய், சிம்பு, விக்ரம் ஆகியோரை வைத்து படம் எடுக்க மணிரத்னம் முடிவு செய்திருந்ததாகவும், பின்னர் சீயான் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கலாம் என திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

  இந்நிலையில், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடம் ஏற்று நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தும் அமிதாப் பச்சன், தெலுங்கில், சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திலும், தமிழில் எஸ்.ஜேசூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

  amitabhaishwarya

  ஏற்கனவே, மணிரத்னத்தின் ’இருவர்’, ‘ராவணன்’ போன்ற திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.