மணிப்பூரை காட்டி நீதி கேட்கும் தி.மு.க! – கலக்கத்தில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

  0
  4
  stalin

  மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அணி மாறியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்க தி.மு.க கோரியிருப்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அணி மாறியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்க தி.மு.க கோரியிருப்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  eps

  மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அவசர அவசரமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. கட்சி மாறிய எம்.எல்.ஏ-வின் பதவியை பறிக்க காங்கிரஸ் கோரியது. ஆனால், பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற சபாநாயகர் இதை ஏற்கவில்லை. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  manipur

  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது பற்றி சபாநாயகரிடம் முறையிட வேண்டும். அவர் நான்கு வாரத்தில் தன் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சபாநாயகரின் அதிகார வரம்பை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்றும், இது போன்ற பிரச்னைகளை விசாரிக்கத் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
  தமிழகத்திலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆளுநரிடம் புகார் அளித்தார்கள் என்பதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  stalin

  ஆனால், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது மணிப்பூர் தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக வழக்கிலும் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
  மணிப்பூர் விவகாரத்தைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு வழங்கினால் அது எடப்பாடி அரசுக்கு எதிராக அமையும். ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும். எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் கலக்கத்தில் உள்ளனர். தங்கள் டெல்லி தலைமை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது.