மணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ!

  0
  1
   வைரல் வீடியோ

  ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும் மகிழ்ச்சி என்ற ஒற்றைப்புள்ளியில் வந்து நிற்கும். அதனால் திருமணத்தை நம் வாழ்வில் யாராலும் மறக்க முடியாது. 

  மேற்கு வங்கம்: மணமகளைத் தூக்க முடியாமல் தூக்கியதால் மணமக்கள் இருவரும் மணமேடையிலேயே குப்புற விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  marriage

  பொதுவாகத் திருமணம் என்றால் அங்குச் சந்தோசம், சடங்கு, மனஸ்தாபம், கண்ணீர்  என பலவித உணர்வுகளையும் ஒரே நாளில் ஒரு சேர அனுபவிக்கலாம். இந்த ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும் மகிழ்ச்சி என்ற ஒற்றைப்புள்ளியில் வந்து நிற்கும். அதனால் திருமணத்தை நம் வாழ்வில் யாராலும் மறக்க முடியாது. 

   

  ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த திருமணம் ஒன்று மணமக்களுக்கு மட்டுமில்லாது அங்கு வந்த எவராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஆம். திருமணம் முடிந்து மணமேடையில் திருமண சடங்கு நடைபெறுகிறது. அப்போது மணமகன்,  மணமகளைத் தூக்குகிறார். ஆனால் சரியாக மணமகளைத் தூக்காததால் அந்த பெண் நிலைதடுமாறி  அப்படியே குப்புற விழுகிறார். அவர் மேலே  மணமகனும் விழ அங்கிருந்தவர்கள்  அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து உறவினர்கள் ஓடிவந்து இருவரையும் தூக்குகின்றனர். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.