மசூதி கட்டுவதற்கு நிலம் கொடுத்த சீக்கியர்! ஒளிரும் இந்தியா!

  0
  2
  சீக்கியர்

  இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்கிற பாகுபாடுகள் எல்லாம் அரசியல் தலைவர்கள் உருவாக்கி பிரித்து வைப்பது தான். எங்களுக்குள் எந்தவிதமான வேற்றுமையும் கிடையாது என்று உலக அரங்கில் உரத்துச் சொல்லும் சம்பவமாக, மசூதி கட்டுவதற்கு சீக்கிய முதியவர் ஒருவர் தனது இடத்தைக் கொடுத்துள்ளார்.  

  சமீபத்தில் சீக்கியர்களின் குருவான குருநானக் 550-வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டது. அப்படி குருநானக்கின் பிறந்த நாளின் போது, தனக்கு சொந்தமான 900 சதுர அடி நிலத்தை, மசூதி கட்டுவதற்காக தானமாக கொடுத்து, மதநல்லிணக்கத்தைக் காத்துள்ளார் ஒரு சீக்கிய முதியவர். 
  உத்தரப்பிரதேசம் முசாபர்நகர் மாவட்டத்தில் வசிக்கும் 70 வயது சீக்கியர் சுக்பால் சிங் பேடி, தானமாக கொடுத்த நிலம் தொடர்பான அத்தனை ஆவணங்களையும்  நகர பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் பரூக்கியிடம் ஒப்படைத்துள்ளார்.

  மசூதி

  மசூதி கட்டுவதற்காக நிலத்தை தானம் கொடுத்தது குறித்து பேசிய முதியவர் சுக்பால் சிங், நாங்கள் புனிதமாக கருதும் குருநானக்கின் பிறந்த நாளையொட்டி இந்த நல்ல காரியத்தை செய்ய முடிவெடுத்ததாக கூறினார். சீக்கிய முதியவரின் இந்த செயல் நாட்டு மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான அருமையான முயற்சி என பல்வேறு தரப்பினரும் அவரைத் தொடர்ந்து மனதார பாராட்டி வருகின்றனர்.