மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீஸில் சரண் !

  0
  1
   Aditya Rao

  நேற்று முன்தினம்,  மங்களூர் விமான நிலையத்தில் கருப்பு நிற பையில், வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

  நேற்று முன்தினம், மங்களூரு விமான நிலையத்தில் கருப்பு நிற பையில், வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பையில் சோதனை செய்து பார்த்ததில், பேட்டரி, ஒயர், வெடிகுண்டு இயக்கும் கருவி மற்றும் வெடிகுண்டு இருந்தது. ஆனால், அந்த வெடிகுண்டுகளில் டைமர் ஏதும் இல்லாததால் அன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

  ttn

   இருப்பினும், விமான நிலையத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு வைத்த நபர்கள் யார் என்று அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில், ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் அந்த பையை புக்கிங் கவுண்டருக்கு அருகே வைத்து சென்றது தெரிய வந்தது. குடியரசு தினவிழா நெருங்குவதையொட்டி, அனைத்து விமான நிலையங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வரும் நிலையில், மங்களூரு மற்றும் மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

  ttn

  ஆட்டோவில் வந்து வெடிகுண்டு வைத்து விட்டு சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.  இந்நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற நபர் தானாக வந்து பெங்களூரு போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.