மக்கள் மனஅழுத்தத்தில் இருக்காங்க…. ஒயின் ஷாப் மட்டும் திறக்க அனுமதியுங்க…. மேகலாயா பா.ஜ.க. கோரிக்கை..

  0
  3
  ஒயின் ஷாப்

  ஊரடங்கு காரணமாக மக்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறார்கள் அதனால் ஒயின் ஷாப்களை (மதுபான கடைகள்) திறக்க அனுமதி அளிங்க என முதல்வர் சங்மாவிடம் அம்மாநில பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

  தொற்று நோயான கொரோனா வைரசுக்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு நாடு முழுவதும் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  பா.ஜ.க.

  அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பல பகுதிகளில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மேகலாயாவில் மக்களின் மனஅழுத்தத்தை குறைக்க ஒயின் ஷாப்புகளை திறக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க. முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அங்கு மக்கள் மது அருந்துவது ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  பா.ஜ.க. தலைவர் எர்னஸ்ட் மவ்ரி

  இது தொடர்பாக மேகலாயாவின் பா.ஜ.க. தலைவரும், காசி ஹில்ஸ் ஒயின் டீலர்கள் மற்றம் நலச் சங்கத்தின் செயலாளருமான எர்னஸ்ட் மவ்ரி, அம்மாநில முதல்வர் கான்ராட் சங்காவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளனர். மது அருந்துவது மாநிலத்தில் ஒரு வாழ்க்கை முறை என்பதால் ஒயின் ஷாப்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். மதுபான கடைகளில் சமூக விலகல் மற்றும் பொது சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.