மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை!

  0
  2
    நடிகை கோவை சரளா

  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் முன்னிலையில்  நடிகை கோவை சரளா அக்கட்சியில் இணைந்திருக்கிறார்.

  சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் முன்னிலையில்  நடிகை கோவை சரளா அக்கட்சியில் இணைந்திருக்கிறார்.

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பெரிய கட்சிகள் என்று சொல்லப்படும், திமுக அதிமுக போன்ற கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது. இது ஒரு புறமிருக்க நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், போட்டியிடுவதாக   மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்தார். 

  kamal ttn

  இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் தனது கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதன்படி நடிகை கோவை சரளா இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், கோவை சரளா தன்னை இக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

  sarala ttn

  இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை சரளா, ‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளிர் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் கட்சி ஆரம்பித்து என்ன கிழிப்பார்கள் ? என்றார்கள். கலைஞர்களுக்குத் தான் மக்களின் மனநிலை தெரியும்’ என்றார்.

  kovai sarala ttn

  முன்னதாக மக்கள் நீதி மய்யத்தில் நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், பாடலாசிரியர் சினேகன், நடிகர் பாலாஜி உள்ளிட்டோர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.